சுகாதாரத்துறை உத்தரவு

0 1904

கொரோனா தனிமை வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோரை தினமும் வீடு சென்று திரும்ப அனுமதிக்கக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையில் தனிமை வார்டுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை ஒரு குழுவாக 4 முதல் 7 நாட்களுக்கு தொடர்ச்சியாக பணியாற்றும் வகையில் நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்களை தினமும் வீட்டுக்கு சென்றுவர அனுமதித்தால், அவர்களது குடும்பத்தினருக்கும், சமூகத்தில் பிறருக்கும் பரவ வாய்ப்பு உள்ளதால் அவ்வாறு அனுமதிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தங்கும் விடுதிகளையோ மருத்துவமனைக்குள்ளேயே தங்குமிடங்களையோ ஏற்பாடு செய்யவும், அங்கு கண்டிப்பாக சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முந்தைய குழுவின் 4 முதல் 7 நாட்கள் பணிக்காலம் முடியும் நேரத்தில் அடுத்த குழுவை தயாராக வைத்திருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments