புதுச்சேரியில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி
ஊரடங்கு உத்தரவால் தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடுவின் உத்தரவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்பதால் ஆண்டு இறுதித்தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை இறுதித்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் மாணவ - மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Comments