சென்னையில் ஓரளவே குறைந்த சுற்றுச் சூழல் மாசுபாடு
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் சுற்றுச் சூழல் மாசுபாடு ஓரளவிற்கே குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் சுய ஊரடங்கு தொடங்கியது முதல் சென்னை சாலைகளில் மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் பெருமளவில் குறைந்துள்ளதோடு, தொழில் நிறுவனங்கள் சார்ந்த மாசுபாடும் குறைந்துள்ளது.
இந்நிலையில் மிக நுண்ணிய வகை மாசுபாட்டுத் துகள்களான 2.5 பி.எம். காற்றில் ஓரளவிற்கே குறைந்திருப்பதாகவும் சென்னையின் பல்வேறு இடங்களில் சுற்றுச் சூழல் மாசுபாட்டில் பெரிய அளவில் தாக்கம் இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 11.45 மணி நிலவரப்படி அமெரிக்கத் தூதரகம், அண்ணாசாலை, வேளச்சேரி ஆகிய இடங்களில் 2.5 பி.எம்.அளவு 53 என்ற குறியீட்டு அளவிலேயே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 51ஆகவும், மணலி தொழிற்பேட்டையில் 66-ஆகவும் உள்ளது.
Comments