இந்தியா தயாரித்த புதிய கொரோனா பரிசோதனை கருவி
புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் கண்டுபிடித்துள்ள புதிய கொரோனா பரிசோதனை கருவிக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது.
புனேவை சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன் எனும் நிறுவனம் தயாரித்துள்ள அந்த கருவியின் மதிப்பு 80 ஆயிரம் ரூபாய் என்றும், ஒரு கருவியின் மூலம் 100 பேருக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேற்கொள்ளப்படும் சோதனைக்கு ஆகும் நேரத்தை விட பாதியளவு நேரத்திலேயே புதிய கருவி மூலம் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கருவிகளை விட கால்பங்கு விலை கொண்ட இந்த கருவியை, அதிகளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள அந்நிறுவனம், ஒரு வாரத்திற்குள் 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் கருவிகளை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
Comments