கொரோனா மிகவும் வேகமாக பரவி வருகிறது: உலக சுகாதார அமைப்பு
கொரோனா நோய் தொற்றால் உலகம் முழுவதும் வெறும் 3 நாள்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக புதிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிலுள்ள ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட புள்ளி விவரங்கள், உலகில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 7 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றன.
3 லட்சமாக இருந்த எண்ணிக்கை 3 நாள்களில் ஒரு லட்சம் அதிகரித்து 4 லட்சத்துக்கும் மேல் கூடிவிட்டதாகவும் அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டியுள்ள உலக சுகாதார அமைப்பு, கொரோனா மிகவும் வேகமாக பரவி வருவதாக எச்சரித்துள்ளது. அதேபோல் கொரோனா நோய் தொற்றின் புதிய மையமாக அமெரிக்கா உருவாகக் கூடும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
Comments