கொரோனாவை சீன வைரஸ் என்று அழைக்காதீர்கள் -சீன அமைச்சர்
மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங்-யீ கொரோனா வைரசை சீன வைரஸ் என்று குறுகிய பார்வையுடன் அழைக்க வேண்டாமென கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் கொரோனா வைரசை சீன வைரஸ் என அழைத்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இனவெறியைத் தூண்டுவதாக அமெரிக்கா மீது சீனா குற்றம் சாட்டியது.
இந்நிலையில் ஜெய்சங்கரை தொலைபேசியில் அழைத்த சீன அமைச்சர் , இத்தகைய குறுகிய மனப்பான்மையை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் வைரசை சீனாவின் பெயரோடு இணைத்துப் பேச மாட்டோம் என்றும் சீனாவுக்கு துணையாக இந்தியா இருக்கும் என்றும் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளதாக இந்தியாவுக்கான சீனாவின் தூதர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Comments