அத்தியாவசிய பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடு ஏற்படாது - அமித் ஷா
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நாட்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடு ஏற்படாது என்பதை தான் உறுதிப்பட கூறுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானவுடன் நாடு முழுவதும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கடைகளில் குவிந்தனர்.
இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயியல் நிபுணர்களுக்கு தான் நன்றி தெரிவித்துக்கொள்வதாக ட்விட்டர் பதிவில் கூறிய அமித்ஷா, பொதுமக்கள் அனைவரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments