21 நாட்கள் ஊரடங்கு என்பது நீண்ட நாட்கள் தான்.. சங்கடமின்றி எதிர்கொள்ளுங்கள் - பிரதமர் மோடி
கொரோனா வைரஸ் பரவல் குறித்து பிரதமர் மோடி உரை
நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் ஊரடங்கு
மக்கள் ஊரடங்கை இந்தியர்கள் அனைவரும் கடைபிடித்தார்கள்
இந்தியர்களால் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது
கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போரிட மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் சவாலாக உள்ளது
சமூக விலகியிருத்தல் மட்டுமே கொரோனாவை எளிதாக விரட்டியடிக்கும் முறை என உலகம் கண்டுள்ளது
தனித்திருத்தலை தவிர கொரோனாவை எளிய முறையில் தடுக்க வேறு வழிகள் இல்லை
கொரோனாவை தடுக்க வேண்டும் என்றால், தொற்று பரவும் வழிமுறைகளை உடைத்தெறிய வேண்டும்
சமூக விலகியிருத்தல் என்பது ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் முக்கியமானது
சமூக விலகியிருத்தலை மீறுவது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு விளைவிப்பதாக அமையும்
கொரோனாவை தடுக்க நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முடக்கப்படும்
கொரோனா வைரசை தடுக்க இந்த முக்கிய நடவடிக்கை அவசியமானதாகும்
இந்தியாவின் அனைத்து பகுதிகளும் ஊரடங்கிற்குள் கொண்டு வரப்படும்
நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு முடக்கம் தொடரும்
மருத்துவர்கள் அறிவுரைப்படி, 21 நாட்கள் விலகியிருத்தல் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க முடியும்
21 நாட்களை சங்கடப்படாமல் எதிர்கொள்ளுங்கள். தவறினால், ஒவ்வொரு குடும்பத்தின் அழிவிற்கு வித்திடும்
வீட்டிலேயே இருங்கள்... ஒரு போதும் வெளியே வர வேண்டும் என நினைக்காதீர்கள்
கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க குறைந்தபட்சம் 21 நாட்கள் தனித்து இருப்பது அவசியமானது
மனித உயிர்களை காக்க வேண்டும் என்பதே நமது நோக்கமாக உள்ளது
ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஒரு வாரத்திற்குள் நூற்றுக்கணக்கானவர்களை பாதிக்கும் என்கிறது உலக சுகாதார அமைப்பு
காட்டுத் தீ போல கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது
21 நாட்கள் சமூக விலகியிருத்தலை செய்யாவிட்டால், நாடு 21 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளப்பட்டு விடும்
மருத்துவத்தில் சிறந்த நிலையில் உள்ள நாடுகளால் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை
இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றாததால் கொரோனா வேகமாக பரவியது
அடுத்தகட்டத்திற்கு இந்தியா வளர வேண்டும் என்றால் வீடுகளில் தனித்திருப்பது அவசியமானது.
பொறுமை மற்றும் ஒழுக்கத்தை கடைபிடிப்பதற்கு இதுவே சரியான தருணம்
கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்
வீட்டில் தனித்து இருக்கும் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்காக வேண்டுங்கள்.
ஊடகத்துறையினர், காவல்துறையினர் இரவு பகல் பாராமல் தொடர்ந்து உழைத்து வருகின்றனர்
அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் தொடர்ந்து நடைபெறுவது உறுதி செய்யப்படும்.
ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா நோய் பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைகளுக்காக மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு, சுகாதாரப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்
தனியார் மருத்துவமனைகள், தனியார் ஆய்வகங்கள் அரசின் நடவடிக்கைகளில் கைகோர்த்து செயல்பட வேண்டும்
வீட்டை விட்டு வெளியேறுவது போன்ற தேவையில்லாத செயலில் ஈடுபட்டால் அது பேராபத்தை கொண்டு வந்துவிடும்
21 நாட்கள் ஊரடங்கு என்பது நீண்ட நாட்கள் தான். சங்கடமின்றி அதனை எதிர்கொள்ளுங்கள்
நீங்கள் உங்கள் வீடுகளில் தனித்து இருப்பதன் மூலம், உங்கள் குடும்பம் மட்டுமின்றி, அண்டை வீடுகளின் நலத்தையும் காக்க முடியும்
Comments