இந்திய பெருங்கடல் பகுதியில் சீன, பாக். கப்பல்கள் நடமாட்டம் கண்டுபிடிப்பு

0 4984

இந்திய பெருங்கடல் பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய கடற்படை கப்பல்கள், சீனா மற்றும் பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்களின் நடமாட்டத்தை கண்டுபிடித்துள்ளன.

இந்திய கடற்படையை சேர்ந்த கப்பல்கள், பி 81 விமானம் ஆகியவை செங்கடல் முதல் மலாக்கா ஜலசந்தி வரையிலான பகுதியை கண்காணித்து வருகின்றன. இந்நிலையில், சீன கடற்படையிலுள்ள ஒய்.901 என்ற டேங்கர் கப்பல் (Chinese Navy Type Y901 class tanker vessel) மலாக்கா ஜலசந்தியிலிருந்து இந்திய பெருங்கடல் பகுதிக்குள் அண்மையில் நுழைந்தது.

இதேபோல் பாகிஸ்தான் கடற்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட யார்முக் (Yarmook) என்ற கப்பல், Romania-வில் இருந்து கராச்சி செல்ல செங்கடலில் வந்தது. இந்த 2 கப்பல்களின் நடமாட்டத்தை கண்டுபிடித்த இந்திய கடற்படை கப்பல்கள், அவற்றை தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments