திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர் ரஜினி ரூ.50 லட்சம் நிதி என தகவல்

0 8173

திரைப்பட பிடிப்புகள் ரத்தாகி பிரச்னைகளை சந்தித்து வரும் தென்னிந்திய திரைப்பட துறை ஊழியர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் அங்கம் வகிக்கும் பெப்சி (FEFSI) சங்கத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பெப்சி சங்க தொழிலாளர்கள் பிரச்னையை சந்தித்து வருவதை சுட்டிக்காட்டி, அவர்களுக்கு உதவி நடிகர்கள் முன்வர வேண்டுமென அச்சங்க தலைவர் ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையேற்று நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாயும், நடிகர் விஜய் சேதுபதி 10 லட்சம் ரூபாயும் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments