மாநிலங்களவையில் 18 இடங்களுக்கான தேர்தல் ஒத்திவைப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநிலங்களவையிலுள்ள 18 இடங்களுக்கு 26ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
17 மாநிலங்களில் காலியான 55 இடங்களுக்கு 26ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் 37 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய ஆந்திரா, குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருக்கும் 18 இடங்களுக்கு 26ம் தேதி தேர்தல் நடைபெறவிருந்தது.
இந்நிலையில், கொரோனா காரணமாக அந்த மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. வரும் 31ம் தேதி ஆய்வுக்கு பிறகு, புதிய தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Comments