ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா விடுதலை
சுமார் 8 மாதங்களாக தடுப்புக் காவலில் இருந்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் அமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவருமான உமர் அப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதையடுத்து உமர் அப்துல்லா, அவரது தந்தை பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
அண்மையில் பரூக் அப்துல்லா மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து உமர் அப்துல்லா மீதான பொது பாதுகாப்பு சட்டம் வாபஸ் பெறப்பட்டு, இன்று அவர் விடுவிக்கப்பட்டார்.
Comments