மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் - தமிழக அரசு

0 6116

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்

கொரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால் தமிழகத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்

ஈரோட்டில் ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது - ஈரோடு மட்டும் அல்லாமல் அருகாமை மாவட்டங்களில் மக்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்

சேலம், கரூர், திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்ட மக்கள் வீடுகளுக்குள் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டியது அவசியம்

மதுரையில் நேற்று ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது - மதுரை மட்டும் அல்லாமல் அருகாமை மாவட்டங்களில் மக்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்

மதுரையில் கொரோனா பாதித்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மக்கள் நிலைமையின் தீவிரத்தை உணர வேண்டும்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் பொது இடங்களில் நடமாடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

தமிழகத்தில் மக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்கிற அரசின் வேண்டுகோளை கடைபிடிக்காவிட்டால் கொரோனா நிலைமை தீவிரமாகும்

மக்கள் கூட்டமாக கூடுவதால் தான் கொரோனா வேகமாக பரவும் என்பதால் மக்கள் வீடுகளில் இருக்க வேண்டியது முக்கியம்

மிக மிக அத்தியாவசியம் என்றால் மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும்

அத்தியாவசியம் என பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் ஒருவருக்கு ஒருவர் 6 அடி தள்ளி நிற்க வேண்டியது கட்டாயம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments