கொரோனா சமூக தொற்றாக மாறினால் என்ன ஆகும்?

0 12777

கொரோனா மூன்றாம் கட்ட பரவலை அடைந்து, சமூக தொற்றாக மாறினால் வென்டிலேட்டர்கள் எனப்படும் செயற்கை சுவாசக் கருவிகளுக்கு அதிகபட்ச தேவை ஏற்படும் என கூறப்படுகிறது.

கொரோனா பரவுவதால் பல நாடுகள் வென்டிலேட்டர் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளன. இதனால் உள்நாட்டு உற்பத்தியை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மைசூருவில் உள்ள ஸ்கான்ரே டெக்னாலஜீஸ் (Skanray Technologies)என்ற நிறுவனம் வென்டிலேட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது.

ஆனால் அதற்கான உதிரி பாகங்களை சப்ளை செய்ய இப்போதுள்ள சூழலில் ஐரோப்பிய நாடுகள் முன்வராதது  உற்பத்தியை பாதிக்கும் என அதன் உரிமையாளர் கூறுகிறார்.

மைசூருவில் உள்ள தயாரிப்பு கூடத்தில் மாதந்தோறும் 200 வென்டிலேட்டர்களை தயாரிக்கும் நிலை உள்ளதாகவும், டிஆர்டிஓ போன்ற அமைப்புகள் உள்நாட்டிலேயே உதிரிபாகங்களை வடிவமைத்து வழங்கினால் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு வென்டிலேட்டரின் விலை 5 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments