பட்ஜெட் 2020 மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
மக்களவையில் இன்று எந்த விவாதமும் நடத்தப்படாமல் 2020 பட்ஜெட் மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் பட்ஜெட் மசோதாவை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார். நாட்டில் நிலவும் அசாதாரண சூழலில், ஏற்கனவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி பட்ஜெட் மசோதா எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டதாக நாடாளுமன்ற விவகார இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் தெரிவித்தார்.
பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்பட்ட பின் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக ஏப்ரல் 3 ஆம் தேதி வரை அவையை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதே போன்று மாநிலங்களவையும் இன்று ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது,
Comments