கொரோனாவுக்கு மலேரியா மருந்து..! ICMR பரிந்துரை

0 10363

 கொரோரனா தொற்று தீவிரமடையும் நோயாளிகளுக்கு ஹைடிராக்சிகுளோரோகுயின் (hydroxychloroquine) என்ற மலேரியா எதிர்ப்பு மருந்தை வழங்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த மருந்து கொரோனா தொற்று சிகிச்சையில் உதவிகரமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளதுடன், அதன் உற்பத்தியை அதிகரிக்குமாறு அங்குள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களை அறிவுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அதை பரிந்துரைத்துள்ளதை அடுத்து நாட்டின் பல நகரங்களில் உள்ள மருந்தகங்களில் அது மின்னல் வேகத்தில் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. முதற்கட்ட ஆய்வுகளின் படி, கொரோனா நோயாளிகளில் குளோரோகுயின் மருந்து வைரல் தடுப்பு பலன்களை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து மருத்துவ ரீதியான சோதனைகள் முழுமையாக நடத்தப்படாவிட்டாலும்,  குளோராகுயின், கொரோனா மருந்தாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments