ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டுக் கொண்டுவரக் கோரி மனு

0 1145

ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த சகாய சதீஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஈரானில் மீன்பிடி தொழில் செய்துவரும் இந்தியர்கள் 860 பேரை மீட்டுக் கொண்டு வர உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குமரி மாவட்ட ஆட்சியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஈரான் தீவுகளில் உள்ள மீனவர்கள் உடல்நலத்துடன் இருப்பதாகவும், அவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டிருந்தது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மீனவர்களை அழைத்து வர முடியவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
((மதுரை

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments