ராஜஸ்தானில் ஒரு லட்சம் பேரை தனிமைபடுத்த தயாராகும் படுக்கைகள்

0 6389

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு லட்சம் பேரை தனிமைபடுத்த தேவையான படுக்கைகளை தயார் செய்ய அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதற்காக கல்லூரிகள், விடுதிகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகளை கண்டறியவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் மட்டும் 10 ஆயிரம் படுக்கைகளை தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ள நிலையில், அதற்கெதிரான போராட்டத்தில் அவசர நிலைகளை சந்திக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ராணுவம், விமானப்படை, பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்திய அசோக் கெலாட், அவர்களது முழு ஒத்துழைப்பையும் கோரியுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments