அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற கடைகளை அடைக்க உத்தரவு
காஞ்சிபுரத்தில் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, மற்ற கடைகள் அனைத்தையும்அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 31ஆம் தேதி வரை பட்டுசேலை, நகை உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சென்ட்ரல் ஏசி பொருத்திய அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். தடையை மீறி கடைகளை திறந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், சமையல் எரிவாயு, சிறிய உணவகம் உள்ளிட்ட கடைகள் திறந்திருக்கும். கூட்டம் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
சாலைகளில் பொது மக்கள் நடமாட்டத்தை குறைத்துக் கொண்டு, தொற்றுநோய் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சியர் பொன்னையன் கேட்டுக்கொண்டுள்ளார்.
திறந்திருக்கும் கடைகளை மூடுமாறு, காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். தொழிற்சாலைகள் நிறைந்த ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், படப்பை பகுதிகளில் அமைந்திருக்கும் தொழிற்சாலைகளில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments