12, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக துவங்க அறிவுறுத்தல்
கொரோனா பாதிப்பு காரணமாக 12 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக துவங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவற்றின் போதுமான இருப்பை உறுதி செய்யவும், அவை அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்கவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பொதுத்தேர்வு எழுதும் 12 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் 1 மீட்டர் இடைவெளியில் அமர்ந்து தேர்வெழுதவும், முகக்கவசம் , கிருமி நாசினி பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், பொதுத்தேர்வை 30 நிமிடங்கள் தாமதாக துவங்க அறிவுறுத்தியதோடு, சென்னை, காஞ்சி, ஈரோடு மாவட்ட மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்ல சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்படுவதை உறுதி செய்யவும் உத்தரவிட்டனர். மேலும் தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
Comments