கொரோனா அச்சுறுத்தலால் ஈரோடு - நாமக்கல் எல்லைகள் மூடப்பட்டதன் ஏன்?
ஈரோடு-நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியான குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள காவிரி பாலங்கள் இன்று 2 வது நாளாக அடைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சென்னை, காஞ்சிபுரம் ஈரோடு மாவட்டங்களை முழுமையாக முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு-நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியான குமாரபாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் பகுதிகளில் உள்ள காவிரி பாலங்கள் இன்று 2 வது நாளாக அடைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் யாரும் நாமக்கல் மாவட்ட எல்லைக்குள் வர இயலாது. நாமக்கல் மாவட்ட பகுதி மக்கள் ஈரோடு மாவட்ட எல்லைக்குள் செல்ல முடியாது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் பவானிக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், 11 ம் வகுப்பு பொது தேர்வு எழுதச் சென்ற மாணவ- மாணவிகள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி தேசியநெடுஞ்சாலை வழியாக சென்றனர்.
நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
Comments