சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு

0 2428

சட்டமன்ற கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சபாநாயகர் தனபாலுக்கு எழுதியள்ள கடிதத்தில், தனிமைப்படுத்துவது மட்டுமே கொரோனாவுக்கு ஒரே மருந்து என உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில்,  தனிமைப்படுத்திக் கொள்வோம் என்று அரசு அறிவித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு எதிராகவே, கூட்டத்தொடர் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களின் பாதுகாப்பு கருதியும், எம்எல்ஏக்கள் தொகுதியில் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களை புறக்கணிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளும் சட்டமன்ற புறக்கணிப்பை அறிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments