"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சுவை உணர்வற்றுப் போனாலும் கொரோனா தொற்று இருக்கலாம்
சுவையுணர்வு திடீரென அற்றுப் போனாலோ, மணத்தை நுகர முடியாமல் போனாலோ கொரோனா தொற்றின் அறிகுறியாக இருக்கலாம் என்கின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.
தென்கொரியா, சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா தொற்று இருப்போரில் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளுக்கு கேட்பதிலும், நுகர்வதிலும், சுவை உணர்வதிலும் பாதிப்பு இருந்ததாகவும் அதே நேரத்தில் கொரோனாவிற்குரிய வேறு அறிகுறிகள் காணப்படவில்லை எனவும் காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வேறு அறிகுறிகள் இல்லாத நிலையில் கொரோனா பாதிப்பை மருத்துவர்களால் கண்டறிய முடியாமல் போய்விடுவதாகவும், இதுவே நோய்த்தொற்று வேகமாகப் பரவ காரணமாகிவிடுவதாகவும் பிரிட்டன் நிபுணர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
Comments