கொரோனா பீதி : இன்ஸ்டாகிராம், முகநூலில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் தரம் குறைப்பு
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் பதிவேற்றப்படும் வீடியோக்களின் தரத்தைக் குறைக்க முகநூல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பெருகி வரும் கொரோனா மரணங்களால் பீதியடைந்துள்ள ஐரோப்பிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியைத் தொடர கேட்டுக் கொண்டுள்ளன.
இதனால் இணைய சேவையில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலில் பதிவேற்றப்படும் வீடியோக்களின் தரத்தைச் சற்று குறைக்க இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற கடுமையான காலகட்டத்திலும் மக்களுடன் நெருக்கமாக இருக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Comments