மார்ச்.31 வரை அவசர மனுக்களை மட்டுமே விசாரிக்கும் என சென்னை காவல்துறை அறிவிப்பு
சென்னை காவல்துறை தரப்பில் மார்ச் 31 வரை அவசர மனுக்கள் மட்டுமே விசாரிக்கப்படும் என, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அத்தியாவசிய பரிந்துரைகளை மட்டுமே தொடர மத்திய அரசு பரிந்துரைத்துள்ள நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் சென்னை காவல் ஆணையரகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த தினகரன், அனைத்து காவல் நிலைய வளாகத்திலும் சானிடைசர்களுடன் கைகழுவும் வசதியை கட்டாயம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அத்தியாவசிய பொருட்களை விற்கும் அனைத்து கடைகளிலும் சானிடைசர்கள் வசதியை ஏற்படுத்த வேண்டும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் போன்ற பல்வேறு நெறிமுறைகளையும் அறிவித்தார்.
Comments