குரோஷியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
தென்மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். தலைநகர் ஸாக்ரெப் அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 3 ஆகப் பதிவானது.
இதனால் பல கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் ஏராளமானோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸாக்ரெப்பில் உள்ள பழமையான தேவாலயம் ஒன்றும் நிலநடுக்கத்தில் பலத்த சேதமடைந்தது.
கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அங்கு தாக்கத்தை ஏற்படுத்தியதாக நிலவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments