பாடகி கனிகா கபூர் சந்தித்த நபர்களுக்கு கொரோனா பரிசோதனை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பின்னணி பாடகி கனிகா கபூர் மும்பையில் சந்தித்த நபர்கள் என்று 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை கண்டுபிடிப்பதற்காக இரண்டு சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக கனிகாவுடன் தொடர்பானவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
லண்டனில் இருந்து திரும்பிய கனிகா கபூர் மும்பையில் சந்தித்த 12 பேர் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
லக்னோவை சேர்ந்த கனிகா கபூர் அண்மையில் மும்பையில் தங்கியிருந்த விடுதி , அவர் சென்ற பாடல் பதிவுக்கூடம். உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Comments