மக்கள் ஊரடங்கை வெற்றியாக கருத வேண்டாம்... இது நீண்ட போராட்டத்தின் துவக்கம் மட்டுமே - பிரதமர் மோடி
மக்கள் ஊரடங்கு முடிந்தவுடன் அதை கொரோனாவுக்கு எதிரான வெற்றியாக கருத வேண்டாம் என பிரதமர் மோடி, கூறியுள்ளார்.
அதற்குப் பதிலாக கொரோனாவுக்கு எதிரான ஒரு நீண்ட போராட்டத்திற்கு மக்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என அவர் டுவிட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் ஊரடங்கு ஒரு போராட்டத்தின் துவக்கம் மட்டுமே என்று குறிப்பிட்டுள்ள மோடி, நாம் நினைத்தால், மனித சமூகத்திற்கு பெரிய சவாலாக உருவெடுத்துள்ள கொரோனாவை ஒழிக்க முடியும் என்பதை நாட்டு மக்கள் வெளிக்காட்டி உள்ளதாக பாராட்டி இருக்கிறார்.
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்காக வெளியிட்டுள்ள மற்றொரு டிவிட்டர் பதிவில், அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே கூடாது என்றும் மற்ற மாவட்ட மக்கள்,தேவைப்பட்டால் மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments