ரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன.
ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 3 ஆக பதிவான நிலநடுக்கம் மேற்கு பால்கன் நாடுகளின் பல இடங்களில் உணரப்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
10 வினாடிக்கு மேல் நீடித்த நில அதிர்வில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், ஒரு குழந்தை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments