நோய் அறிகுறி இல்லாமல் உலவும் super spreaders

0 13475

மருத்துவ உலகின் கண்களுக்கு தெரியாத வகையில் நோய் தொற்றுகளை அதிக எண்ணிக்கையில் பரப்பும் நோயாளியை super-spreader என்று அழைக்கின்றனர்.   

இப்போது கொரோனா பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் super spreaders  இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மும்பை கல்யாணில், கொரோனா தொற்றுடன் அமெரிக்காவில் இருந்து வந்த நபர்  தொற்று இருப்பது தெரியாமலேயே சுமார் 1000 பேருடன் தொடர்பில் இருந்திருக்கிறார், ரயில் பயணம் மேற்கொண்டதுடன் திருமணம் ஒன்றிலும் அவர் பங்கேற்றுள்ளார். 

டெல்லியைச் சேர்ந்த 46 வயது நபர் இத்தாலியில் இருந்து கொரோனா தொற்றுடன் திரும்பி வந்த பிறகு 813 பேருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். மெட்ரொவில் பயணம் செய்த அவர் வேலை நிமித்தமாக பலருடன் கலந்து பழகியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதே போன்று தென் கொரியாவில் கொரோனா அறிகுறி ஏதும் காணப்படாமல் தொற்று பாதித்த பெண், தான் செல்லும் சர்ச்சில் 37 பேருக்கு அதை பரவச் செய்த தும் கண்டுபிடிக்கப்பட்டது. 

super spreaders  என கருதப்படுபவர்களுக்கு நோய் அறிகுறி எதுவும் காணப்படாது என்பதால் அவர்கள் நோய்த்தடுப்புக் காவலுக்குச் செல்வதில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments