கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள்

0 2097

கொரோனா பரவலை தடுக்க சென்னை எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன.

மக்கள் ஊரடங்கை முன்னிட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும் நிலையிலும் மாகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் 200 வார்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் நீதிமன்றம்,  ரயில் நிலையம், பேருந்து நிறுத்தங்கள் சாலையோர நடைபாதைகள், நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் உள்ளிட்டவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

புதுப்பேட்டை மருத்துவமனை, மூடப்பட்ட கடைகள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. நுங்கம்பாக்கத்தில் சாலைகள், ஏ.டி.எம்.கள், கடைகள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments