பிரதமர் அறிவுறுத்தலின் படி பால்கனிகள் நின்று கரவொலி எழுப்பி மக்கள் முன்னோட்டம்
பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் படி இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் சூழலில், நேற்றைய தினமே சில பகுதிகளில் பொதுமக்கள் அதற்கான முன்னோட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வியாழக்கிழமை நாட்டுமக்களுக்கு உரைநிகழ்த்திய பிரதமர் மோடி 22ம் தேதியான இன்று மக்கள் ஊரடங்கை கடைபிடிக்கவும், கொரோனாவுக் கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாலை 5 மணிக்கு பால்கனி உள்ளிட்ட இடங்களில் நின்று கரவொலி எழுப்பவும் அறிவுறுத்தினார்.
அதன்படி நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை மாலையே, நொய்டா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சிலர் இதற்கான முன்னோட்டத்தில் ஈடுபட்டனர்.
பால்கனிகளில் நின்று கைத்தட்டியவர்கள், பாத்திரங்களை கொண்டு ஓசை எழுப்பினர். ஒரு சிலர் பாரத் மாதா கீ ஜெய் என்றும் முழக்கமிட்டனர்.
Comments