அடுக்குமாடிக் குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்ட 4000 பேர்

0 14386

டெல்லியை அடுத்த நொய்டாவின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் சுமார் 4 ஆயிரம் பேர் கொரோனா பீதியால் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் துருக்கி, பிரான்ஸ், இத்தாலி என பத்து நாடுகளுக்குப் பயணம் செய்து வெளிநாட்டில் இருந்து திரும்பியுள்ளார். அந்த குடியிருப்பு வாசிகளுடன் அவர் ஹோலிப் பண்டிகையும் கொண்டாடியுள்ளார்.

3 வாரம் கழித்து அவருக்கு உடல் நலம் மோசம் அடைந்தது. கொரோனா சோதனை நடைபெற்று அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவர் மூலம் மற்றவர்களுக்கும் நோய் பரவியிருக்கக் கூடும் என்று அச்சம் எழுந்துள்ளது. இதனால் மார்ச் 23 மாலை ஏழு மணி வரை அந்த குடியிருப்பு வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டு கிருமி நாசினிகளால் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments