ஊரடங்கை மீறி ரயிலில் முண்டியடித்து பயணமான மக்கள்
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து பிரதமர் அறிவித்த மக்கள் ஊரடங்கை ஏற்று, தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல், மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலை மீறி நேற்று ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
சென்ட்ரலில் இருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் கொல்கத்தா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் கடைசியாகப் புறப்பட்டது. இந்த ரயிலில் பயணிக்க அதிகமானோர் காத்திருந்ததால், ரயில்வே காவலர்கள் சாதாரண டிக்கெட் எடுத்திருந்தவர்களையும முன்பதிவு பெட்டியில் ஏற்றி விட்டனர்.
இதனால் முன்பதிவு செய்திருந்தவர்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர். கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் வந்திருந்தனர். மக்கள் நெருக்கமாக இருந்தால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ஒரே ரயிலில் (ஆட்டு மந்தை போல) ஏராளமானோர் பயணித்தது முன்பதிவு செய்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Comments