பொதுமக்களிடையே நெருக்கத்தை குறைக்க டெல்லி மெட்ரோ புதிய திட்டம்
டெல்லியில் பொதுமக்களிடையே நெருக்கத்தை குறைக்கும் நோக்கில், வரும் திங்கள் முதல் மெட்ரோ ரயில் சேவையில் புதிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காலை 10 மணி முதல் 4 மணி வரையிலான அனைத்து மெட்ரோ ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காலையில் 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக காலை 6 மணி முதல் 8 மணி வரையில் 20 நிமிடங்களுக்கு ஒரு ரயில் புறப்படும் எனவும், அதில் மருத்துவம், தீயணைப்பு, மின்சாரம் மற்றும் போலீசார் போன்ற முக்கியத் துறைகளை சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments