இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 315ஆக அதிகரிப்பு

0 4117

இந்தியாவில் கொரோனா பாதிப்புடையோரின் எண்ணிக்கை 315 ஆக அதிகரித்துள்ளது.

கொல்கத்தாவில் ஒருவருக்கும் புனேயில் ஒரு பெண்ணுக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த இருவருமே எந்த வெளிநாட்டுக்கும் பயணம் செய்யவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்ட்ராவில் அதிக அளவில் பாதிப்பு காணப்படுகிறது.

நேற்று ஒரே நாளில் 12 பேர் புதிதாக பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இணைந்துள்ளனர்.  கேரளா உள்ளிட்ட வெளிநாடுகளுடன் தொடர்புடைய மாநிலங்களிலும் அதிக எண்ணிக்கையில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

கேரளத்திலும் 12 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் புதிதாக 64 பேர் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments