கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நகரங்கள்

0 2213

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய நகரங்கள், சுற்றுலாத்தலங்கள் ஆள், அரவமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

சீனாவில் இருந்து கடந்த ஆண்டின் இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு சில நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், சில நகரங்களை சீல் வைத்தும் ஒரு சில நாடுகள் உத்தரவிட்டுள்ளன.

இதனால் பெரும் போக்குவரத்து நெரிசலோடு இருந்த சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. ஜெர்மனியில் முக்கிய நகரமான பெர்லினில் பிரபலமான சுற்றுலாத் தலங்கள் முற்றிலுமாக வெறிச்சோடி காணப்படுகின்றன. 

மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வேலைக்குச் செல்லவோ, அத்தியாவசிய ஷாப்பிங் செய்யவோ, மருத்துவரை சந்திக்கவோ அல்லது தனியாக உடற்பயிற்சி செய்யவோ மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் மிக முக்கியச் சுற்றுலாப் பகுதியான போண்டி கடற்கரையில் கூடியிருந்த ஏராளமான மக்கள் அரசின் அறிவிப்பையடுத்து அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் கடற்கரை மூடப்பட்டு வெறிச்சோடியது. 

பிரான்சில் இருவாரங்கள் மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய காரணங்கள் இன்றி வெளியில் பயணிக்க அனுமதிக்கப்படாததால் பெரும்பாலான நகரங்கள் மக்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது.

இந்த நிலையில் பொருட்கள் வாங்குவதற்கு பெரும் கடைகளில் கூட்டம் அலைமோதிய நிலையில் வாடிக்கையாளர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments