இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணித்த 12 பேருக்கு கொரோனா

0 230911

இரண்டு ரயில்களில் பயணம் செய்த 12 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதால் அவர்கள் மூலம் மற்ற ரயில் பயணிகளுக்கும் அந்நோய் பரவியிருக்கலாம் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

டெல்லியில் இருந்து ஆந்திராவில் உள்ள ராமகுண்டத்திற்கு சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரசில் பயணித்த 8 பயணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். இதே போன்று மும்பையிலிருந்து ஜபல்பூருக்கு கோதான் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 4 பேர் வைரஸ் பாதிப்புடையவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அனாவசியமாக யாரும் நீண்ட தூர ரயில்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று ரயில்வே அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments