டெல்லியில் இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து கெஜ்ரிவால் ஆலோசனை

0 1895

டெல்லியில் இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து ஆலோசித்து வருவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 5 பேருக்கு மேல் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக டிஜிட்டல் வழி செய்தியாளர்கள் சந்திப்பில் கொரோனாவை எதிர்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அவர் அறிவித்தார்.

முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் இரட்டிப்பாக்கப்படும் என்றும் ஏப்ரல் 7ம் தேதிக்குள் சுமார் எட்டரை லட்சம் பேருக்கு 4 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை பென்சன் வழங்கப்படும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

இரவு பாதுகாப்பகங்களில் அடைக்கலம் பெறும் ஏழைகளுக்கு இலவச உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் என்றும் எந்த ஒரு தினக்கூலி தொழிலாளியும் பசியுடன் இருக்க கூடாது என கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ரேசன் கடைகளில் 72 லட்சம் பேர் பயன் பெற்று வருவதாக கூறிய அவர் 50 சதவீத ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments