காங்கிரசிலிருந்து விலகிய 22 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்

0 4935

தகுதி நீக்கம் செய்யப்பட்ட மத்தியப்பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 22 பேரும் பாஜகவில் இணைந்தனர்.

முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் உள்பட 22 பேர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸிஸ் இருந்து விலகினர். இதனால் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மை ஆதரவை இழந்தது.

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திப்பதைத் தவிர்க்க கமல்நாத் ராஜினாமா செய்து விட்டார். இதனிடையே ஏற்கனவே 6 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் இதர 16 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவையும் ஏற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர் ஜே.பி, நட்டா முன்னிலையில் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments