வெளிநாட்டு விமானங்கள் பாகிஸ்தானுக்கு வர 14 நாட்கள் தடை விதிப்பு
பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் தரையிறங்க அனைத்து வெளிநாட்டு விமானங்களுக்கும் இருவாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடன் நெருக்கமான நட்பு கொண்ட பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 730ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்றிரவு 8 மணி முதல் அனைத்து வெளிநாட்டு பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களுக்கும் பாகிஸ்தான் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக உலக வங்கி அளித்த கடனில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தொகையில், சுமார் 4 கோடி அமெரிக்க டாலர்களை செலவிடுவதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments