இந்தியர்களை அழைத்துவரச் சிறப்பு விமானம்
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரச் சிறப்பு விமானங்களை இயக்குவது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது.
விமான நிறுவனங்கள் சேவைகளை ரத்து செய்துவிட்டதால் பல்வேறு நாடுகளில் விமான நிலையங்களில் இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவில் தரையிறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இத்தாலியில் உள்ள இந்தியர்கள் 200 பேரை அழைத்து வருவதற்காக ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் ரோமுக்குச் சென்றது. இந்த விமானம் ஆட்களை ஏற்றிக்கொண்டு நாளை காலை டெல்லிக்குத் திரும்பும்.
இதேபோல் நெதர்லாந்து, உஸ்பெகிஸ்தான், மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் உள்ள இந்தியர்களை அழைத்து வரச் சிறப்பு விமானங்களை இயக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
Comments