வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டணமில்லா பேருந்துகள்

0 15226

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கோ அல்லது வீடுகளுக்கோ கட்டணமின்றி செல்ல அரசு சார்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

மாநகர் போக்குவரத்துக்கழகம் சார்பில் 2 குளிர்சாதன பேருந்துகள் மற்றும் 2 சிற்றுந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட எல்லைகளான பூந்தமல்லி, படப்பை, கேளம்பாக்கம், திருவான்மியூர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்கள் வரை இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பிரதான சாலைப் பகுதிகள் வரை குளிர்சாதனப் பேருந்துகளும், மற்ற இடங்களுக்கு சிற்றுந்துகளும் இயக்கப்படுகின்றன.

நாளை முதல் வெளிநாட்டு விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு வரை இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments