யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை?
யாருக்கெல்லாம் கொரோனா வைரஸ் கண்டறியும் பறிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது.
கடந்த 14 நாட்களில் வெளிநாட்டுப் பயணம் செய்தவர்களில் கொரோனா அறிகுறி இல்லாதவர்களையும் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமையில் இருக்கச் செய்ய வேண்டும். காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிக்கல் ஆகிய அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் கொரோனா கண்டறியும் சோதனை செய்ய வேண்டும்.
ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அவரின் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தனிமையில் வைத்துக் கண்காணிக்கப்பட வேண்டும்.
கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டவர்களுக்கு அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்து அறிகுறி தென்படாதவர்களுக்கும் ஐந்து முதல் 14 நாட்களுக்கு இடையில் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும்.
Comments