அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க யார் முன்வந்தாலும் அனுமதி அளிக்கப்படும் - ஓ.எஸ்.மணியன்
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க யார் முன்வந்தாலும் அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தருகிறோம் என யார் கூறினாலும் அனுமதி வழங்கிவிடுவீர்களா என கேள்வி எழுப்பிய தி.மு.க. உறுப்பினர் கீதாஜீவன், மதிய உணவுத்திட்டத்தை போல காலை உணவுத் திட்டத்தையும் தமிழக அரசே ஏற்க வலியுறுத்தினார்.
அப்போது காலை உணவுத் திட்டம் தற்போது இல்லை என்றும் தனியார் அமைப்பினர் தாமாக முன்வந்து வழங்குவதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க தனியார் முன்வந்ததால் அவர்களுக்கு உணவு தயாரிக்க இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த இடத்துக்கு பட்டா எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
எத்தனையோ நிறுவனங்கள் இருக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது ஏன் என்ற கீதா ஜீவனின் கேள்விக்கு அது தர்ம காரியம் என்றும் அதனை யார் செய்ய முன்வந்தாலும் அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
Comments