ஜோர்டான் நாட்டில் இன்று முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு

0 2202

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய கிழக்கு நாடான ஜோர்டானில் இன்று முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீடுகளிலேயே தங்குமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், கொரோனாவின் அபாயத்தை உணராத மக்கள் அதை பொருட்படுத்தாமல் வழக்கம் போல இயங்கிவந்ததால் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத அவசர தேவைகள் தவிர மற்ற எதற்காகவும் பொதுமக்கள் வெளியில் பயணப்படக்கூடாது எனவும், மீறினால் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியா, ஈராக், எகிப்து, இஸ்ரேல் உடனான எல்லைகளையும் ஜோர்டான் மூடியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments