கொரோனாவை எதிர்கொள்ள சார்க் அமைப்பின் சார்பில் அவசரகால நிதி

0 1955

கொரோனாவை எதிர்கொள்வதற்கு அவசரகால நிதியை சார்க் நாடுகள் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, நேபாளம், பூடான், மாலத்தீவு ஆகியவை நிதி அறிவித்துள்ளன. அண்மையில் சார்க் நாடுகளின் தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடிய மோடி, கொரோனாவை எதிர்கொள்ள அவசர கால நிதி உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கு இந்தியா சார்பில் 75 கோடி ரூபாயை அறிவித்தார். இந்நிலையில் நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி (K P Sharma Oli) தங்களது நாட்டின் பங்களிப்பாக சார்க் அவசரகால நிதிக்கு இந்திய மதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய் (npr rupees 10 crores) அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகீத், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயும் (USD 2,00,000 ) பூடான் வெளியுறவு அமைச்சர் தான்டி டோர்ஜி (Tandi Dorji) சுமார் 75 லட்சம் ரூபாயும் (100,000 US Dollars) வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments