பொறுப்பின்றி அலட்சியத்துடன் கொரோனா பரிசோதனை செய்யும் அதிகாரி

0 2318

கர்நாடகத்தில் சுகாதார பணியாளர் ஒருவர் இருக்கையில் அமர்ந்து, செல்போனில் பேசிக்கொண்டே அசட்டைத்தனமாக ரயில் பயணிகளை அரைகுறையாக சோதனையிட்டு அனுப்பும் வீடியோ வைரலாகியது.

தும்கூர் ரயில் நிலையத்தில் சுகாதார உதவியாளர் நரசிம்மமூர்த்தி என்பவர் சோதனை நடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பயணிகளின் நேருக்கு நேராக நின்று வெப்ப மானியை வைத்து சோதனயிடாமல் சேர்போட்டு அமர்ந்தும், செல்போனில் பேசிக்கொண்டே, ஒவ்வொருவரையும் பார்த்து வெப்பமானியை நீட்டி போக்குகாட்டி அனுப்பியுள்ளார்.

வெப்ப அளவை பார்க்காத அவர், முகத்தைக்கூட பார்க்காமலேயே பயணிகளை அனுப்பியுள்ளார்.அசட்டைத்தனமான இச்செயல், சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து நரசிம்மமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments