நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு

0 3858

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

விதி 110-ன் கீழ் சட்டப்பேரைவையில் அறிவிப்பு வெளியிட்ட அவர் நீட் தேர்வு அறிமுகத்துக்குப் பின் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். எனவே அரசு, மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் இயற்ற அரசு பரிசீலித்து வருவதாகக் கூறினார்.

அது தொடர்பான பரிந்துரைகளை தமிழக அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்றும் அதில் பள்ளிக்கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலம், சட்டம் ஆகிய துறைகளின் செயலாளர்களும், 2 கல்வியாளர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் இந்த ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார் என்றும் தெரிவித்தார். இந்த ஆணையம் ஒரு மாதத்துக்குள் அரசுக்கு அளிக்கை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments