பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் சோதனை நடத்திய வடகொரியா
வடகொரியா 2 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை சோதனை நடத்தியிருப்பது அப்பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு பியாங்கான் மாகாணத்தில் ((North Pyongan province)) இருந்து ஏவப்பட்ட 2 ஏவுகணைகளும், ஜப்பான் அருகே கிழக்கு கடல் பகுதியில் (( East Sea)) விழுந்தன.
அந்த 2 ஏவுகணைகளும் எத்தனை கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்ந்து சென்று தாக்கும் நடத்தும் வல்லமை கொண்டவை என்பது தெரியவில்லை. அந்த ஏவுகணைகள் பாலிஸ்டிக் ரகத்தை சேர்ந்தவை என்று மட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments